December 29 , 2025
2 days
37
- வீர் பால் திவாஸ் ஆனது இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது சாஹிப்சாதா ஜோராவர் சிங் (9 வயது) மற்றும் சாஹிப்சாதா ஃபதே சிங் (7 வயது) ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
- அவர்கள் குரு கோபிந்த் சிங் ஜியின் (பத்தாவது சீக்கிய குரு) இளைய மகன்கள் ஆவர்.
- சீக்கிய சமயத்தினை கைவிட மறுத்ததற்காக சாஹிப்சாதாக்கள் 1705 ஆம் ஆண்டில் சிர்ஹிந்தில் முகலாய ஆளுநர் வஜீர் கானால் தூக்கிலிடப்பட்டனர்.
- இந்த தினம் 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
Post Views:
37