வெகுஜன ஊடக ஒத்துழைப்பு மீதான சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
June 5 , 2021 1536 days 581 0
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shangai Cooperation Organisation – SCO) அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் இடையிலான வெகுஜன ஊடக ஒத்துழைப்பு மீதான ஒரு ஒப்பந்தத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது இந்தியா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கசகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இந்த ஒப்பந்தமானது,
வெகுஜன ஊடகத் துறையின் சிறந்த நடைமுறைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உறுப்பினர் நாடுகள் பகிர்ந்து கொள்ளவும்,
வெகுஜன ஊடகத் துறையின் கூட்டமைப்புகளுக்கு இடையில் சமமான மற்றும் பரஸ்பர ரீதியிலான நன்மையை வழங்கும் ஒத்துழைப்பினை ஊக்குவிக்கவும் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும்.