TNPSC Thervupettagam

வெடிகுண்டு அகற்றும் அமைப்புகள்

December 31 , 2025 9 days 73 0
  • இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, வெடிகுண்டு அகற்றும் அமைப்புகளுக்கான இந்தியாவின் முதல் தேசியத் தரநிலையை அறிவித்துள்ளது.
  • புதிதாக அறிவிக்கப்பட்ட இந்தத் தரநிலை IS 19445:2025 என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் (TBRL) ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில் இந்தத் தரநிலை உருவாக்கப் பட்டது.
  • வெடிமருந்துகள் மற்றும் பிளவு விளைவுகளில் வெடிகுண்டு அகற்றும் அமைப்புகளைப் பரிசோதிக்க இது தெளிவான வழிகாட்டுதல்களை வகுக்கிறது.
  • கொள்முதல் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சோதனை அமைப்புகளால் தன்னார்வ அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் படுவதற்காக இந்தத் தரநிலை வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் சீரான சோதனை நடைமுறைகளைக் கொண்டு வருவதையும் வெடிகுண்டு அகற்றும் நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்