வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையானது விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரம்புகளைக் குறைப்பதற்காக வேண்டி வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த வாகனத்தில் பொருத்தப்படக் கூடிய அதிகுறைந்த கன அளவு கொண்ட ஒரு தெளிப்பானை உருவாக்கும் முயற்சியைத் துவங்கி உள்ளது.
ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பாலைவன வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் உலகின் முதல் நாடு இந்தியாவாகும்.