TNPSC Thervupettagam

வெண்மைப் புரட்சி 2.0

February 19 , 2026 4 days 62 0
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதலை 50% அதிகரிக்க இந்திய அரசு வெண்மைப் புரட்சி 2.0 ஐத் தொடங்கியுள்ளது.
  • இந்த முயற்சியை கூட்டுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • 2028–29 ஆம் ஆண்டுக்குள் தினசரி பால் கொள்முதலை 1,007 லட்சம் கிலோகிராமாக உயர்த்துவதே இதன் இலக்கு ஆகும்.
  • சுமார் 75,000 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் (DCS) உருவாக்கப்படும் என்பதோடு மேலும் தற்போதுள்ள 46,422 DCSகள் வலுப்படுத்தப்படும்.
  • இந்தத் திட்டம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் தேசிய பால் மேம்பாட்டுத் திட்டம் 2.0 என்பதின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் பால் பண்ணை தொழிலாளர் தொகுப்பில் கிட்டத்தட்ட 70% பெண்கள் உள்ளனர் என்ற நிலையில் இந்தத் திட்டம் அதிக பெண் பால் பண்ணையாளர்களை கூட்டுறவு அமைப்புகளுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது.
  • விவசாயிகளின் வருமானம், கிராமப்புற வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பை நன்கு மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்