கர்நாடக அரசாங்கத்துடன் இணைந்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority - NDMA) வெப்ப அலைகள் ஏற்படும் போது அதற்கான தயார் நிலை, தணிப்பு மற்றும் மேலாண்மை குறித்து “வெப்ப அலை 2020” என்ற ஒரு தேசியப் பட்டறையை கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான வெப்பமான வானிலை நிகழ்வுகளை நிர்வகிப்பதற்காக வெப்ப அலை (அனற்காற்று) பருவத்திற்கு முன்கூட்டியே இந்தப் பட்டறையானது சிறப்பாக நடத்தப் பட்டுள்ளது.
காலநிலை மாற்றமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி கோடை வெப்ப நிலையானது 0.5 ° C ஆக உயருவதற்கு வழி வகுத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் NDMA நடத்தி வரும் இப்பட்டறைத் தொடரின் 4வது ஆண்டுப் பட்டறை இதுவாகும்.