கேரள மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது, கோழிக்கோட்டின் மூடடி பஞ்சாயத்தில் வெப்பத் தகவமைவு கொண்ட மூடடி திட்டத்தைத் தொடங்கியது.
அதிகரித்து வரும் வெப்ப அலைகளைச் சமாளிக்க மாநிலத்தில் உள்ள முதல் உள்ளாட்சி அரசு தலைமையிலான வெப்ப நடவடிக்கைக்கான செயல் திட்டம் இதுவாகும்.
ஒன்றரை ஆண்டு கால சமுதாய அடிப்படையிலான ஆராய்ச்சிக்குப் பிறகு பருவநிலை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள வழிநடத்தினர்.
இந்தத் திட்டத்தின் சோதனையானது, அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும், பின்னர் 32 மையங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
உள்ளாட்சிக் கட்டிடங்களுக்கு வெப்பத்தை பிரதிபலிக்கும் வண்ணப்பூச்சுகள், மூங்கில் தடையமைப்புகள் மற்றும் சூரிய ஒளித் தடுப்பு/நிழல் தரும் சாளரங்களைப் பயன்படுத்துவதை இந்த வழிகாட்டுதல்கள் ஊக்குவிக்கின்றன.
மூடடி பஞ்சாயத்து அதன் செயலூக்க மாதிரிக்காக ஆணையத்தினால் பருவநிலை மாற்றத்திற்கான 'செயலில் உள்ள ஆய்வகமாக' தேர்ந்தெடுக்கப்பட்டது.