TNPSC Thervupettagam

வெறிநாய்க் கடி நோய் ஒழிப்பு - பூடான்

September 9 , 2026 5 days 60 0
  • பொது சுகாதாரப் பிரச்சனையாக நாய் மூலம் பரவும் வெறிநாய்க் கடி நோயை (Rabies) ஒழித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள முதல் நாடு என்ற பெருமையை பூடான் பெற்றுள்ளது.
  • வெறிநாய்க் கடி நோய் என்பது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும், மேலும் நோய் அறிகுறிகள் தோன்றிவிட்டால் இது உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.
  • இது முக்கியமாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் மூலம், குறிப்பாக கடிப்பதால் பரவுகிறது.
  • உலகளவில் மனித வெறிநாய்க் கடி நோய் இறப்புகளில் சுமார் 99% நாய்களால் ஏற்படுகின்றன.
  • உலகளவில், வெறிநாய்க் கடி நோய் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 59,000 மனித இறப்புகளை ஏற்படுத்துகிறது, இதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது.
  • தேசிய வெறிநாய்க் கடி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் மனித வெறிநாய்க் கடி நோய் இறப்புகளை பூஜ்ஜியமாகக் கொண்டுவர இந்தியா இலக்கு வைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்