வெறுப்பினை உண்டாக்கும் பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 18
June 21 , 2023 832 days 314 0
வெறுப்பினை உண்டாக்கும் பேச்சு என்ற உலகளாவியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய அவசரத் தேவையின் முக்கிய நினைவூட்டலாக இத்தினம் விளங்குகிறது.
பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சுகள் பரவுவதை எதிர்ப்பதற்கும், புரிதல், மரியாதை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்குமான கூட்டு நடவடிக்கைக்கான முக்கிய அழைப்பினை இது விடுத்துள்ளது.
இந்த முக்கியத் தினமானது, வெறுப்பினை உண்டாக்கும் பேச்சு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் உத்தி மற்றும் செயல்திட்டத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
இத்தினமானது 2019 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.