வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு ரீதியாக இழைக்கப்படும் குற்றங்கள் மசோதா 2025
December 10 , 2025 15 hrs 0 min 6 0
கர்நாடக அமைச்சரவையானது இந்த மசோதாவை அங்கீகரித்தது என்பதோடுஇது பெலகாவியில் நடைபெற உள்ள அந்த மாநிலச் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
மதம், இனம், சாதி, பாலினம், மொழி, இயலாமை அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் காயம், வேற்றுமை, பகைமை அல்லது வெறுப்பை உருவாக்கும் வகையில் செய்யப்படும் அல்லது பகிரப்படும் எந்தவொரு வெளிப்பாட்டையும் வெறுப்புப் பேச்சாக இந்த மசோதா வரையறுக்கிறது.
வெறுப்பு ரீதியாக இழைக்கப்படும் குற்றத்திற்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் குற்றங்களுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மின்னணு/இணைய ஊடகங்கள் உள்ளிட்ட எந்த தளத்திலிருந்தும் வெறுப்பு ரீதியாக இழைக்கப்படும் குற்றம் சார்ந்த உள்ளடக்கங்களைத் தடுக்க அல்லது அகற்ற என்று அதிகாரிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
வெறுப்புப் பேச்சை குறி வைத்து குறிப்பாக சட்டம் இயற்றிய முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.