TNPSC Thervupettagam

வெற்றி கரங்கள் திட்டம்

September 4 , 2026 9 days 104 0
  • வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச அளவிலான திறன் பயிற்சி வழங்குவதற்காக 'வெற்றி கரங்கள்' திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், 1,000 பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ₹15 கோடி செலவில் சர்வதேச அளவிலான திறன் பயிற்சி வழங்கப்படும்.
  • மேலும் 50,000 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கொத்தனார், தச்சு, மின்சாரம், குழாய் அமைத்தல் மற்றும் வண்ணம் பூசுதல் ஆகிய பணிகளில் ஏழு நாள் பயிற்சி வழங்கப்படும், மேலும் ஊதிய இழப்பு இழப்பீடாக நாள் ஒன்றுக்கு ₹800 வழங்கப்படும்.
  • பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான (Gig workers) விபத்து காப்பீட்டுத் தொகையை ₹10 லட்சமாக அரசு இரட்டிப்பாக்கும், மேலும் மின் இருசக்கர வாகனங்கள் வாங்கும் 1,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வங்கி கடன்களுக்கான வட்டித் தொகையை அரசே ஏற்கும்.
  • சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரப் பகுதிகளில் புலம் பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்காக 50 தொழிலாளர் வசதி மையங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்