TNPSC Thervupettagam

வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

September 30 , 2026 12 hrs 0 min 34 0
  • வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பெண் தொழில்முனைவோருக்கான ஆதரவைத் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்துகிறது.
  • தகுதியான பெண் தொழில்முனைவோர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) மூலம் ₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை கடன்களைப் பெறலாம்.
  • குறையும் இருப்பு அடிப்படையில் 9.95% ஆண்டு வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன, இவற்றை 9 ஆண்டுகள் வரை திரும்பச் செலுத்தலாம்.
  • இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்படுத்தப் படுகிறது.
  • ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சிறந்த 10 பெண் தொழில்முனைவோரை அடையாளம் காணுமாறு சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்