1E 1547.0−5408 என்ற காந்த விண்மீனைச் சுற்றி வெற்றிட இரட்டை ஒளிவிலகல் நிகழ்வதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது குவாண்டம் மின்காந்த இயக்கவியல் (QED)கணிப்பை ஆதரிக்கிறது.
மிகவும் வலுவான காந்தப்புலம் வெற்று இடத்தை ஒரு படிகத்தைப் போல செயல்படச் செய்து ஒளியின் துருவமுனைப்பை மாற்றும் போது வெற்றிட இரட்டை ஒளிவிலகல் ஏற்படுகிறது.
சுமார் 14,700 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த காந்த விண்மீனில் இருந்து 80% வரையிலான எக்ஸ்ரே துருவமுனைப்பை IXPE செயற்கைக்கோள் கண்டு அறிந்தது.
இந்த ஆய்வானது NICER மற்றும் ஆஸ்திரேலியாவின் முர்ரியாங் ரேடியோ தொலை நோக்கியையும் பயன்படுத்தியது.
காந்த விண்மீன்கள் என்பவை மிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களைக் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களாகும், அவை இந்த குவாண்டம் விளைவைப் படிப்பதற்கான இயற்கையான ஆய்வகங்களாக அமைகின்றன.