TNPSC Thervupettagam

வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்

June 7 , 2026 9 days 173 0
  • தமிழ்நாடு அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணத்தை' வெளியிட்டது.
  • இந்த ஆவணம் அரசின் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் 436 தொலைநோக்கு அறிக்கைகளைக் கொண்டுள்ளது.
  • இது திருக்குறளின் கருத்துருக்களால் ஈர்க்கப்பட்டு 10 தூண்கள் மற்றும் 54 துணைத் தூண்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி, சுகாதாரம், வேளாண்மை, பெண்கள் நலன், இளைஞர் மேம்பாடு, உள் கட்டமைப்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் ஆகியவை இதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாகும்.
  • இந்த தொலைநோக்கு அறிக்கைகள் செயல்படுத்துவதற்காக 35 அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு துறையும் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் காலக்கெடுவுடன் விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது தமிழ்நாடு முழுவதும் கொள்கை அமலாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடலை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்