TNPSC Thervupettagam

வெற்றிப் பயணம் திட்டம் குறித்த வழக்கு தள்ளுபடி

October 7 , 2026 5 days 107 0
  • தமிழ்நாட்டின் 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 02 முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,695 அரசுப் பேருந்துகளில் தினமும் 84.32 லட்சம் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணத்தை இத்திட்டம் வழங்குகிறது.
  • அரசுப் பேருந்துகளில் மட்டும் இலவசப் பயணம் வழங்குவது, பேருந்துப் போக்குவரத்தில் சமமான போட்டிச் சூழலைப் பாதிப்பதன் மூலம் சரத்து 14-ஐ (சமத்துவ உரிமை) மீறுவதாக அமையும் என்று மனுதாரர் வாதிட்டார்.
  • மேலும், மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றை மேற்கோள் காட்டிய மனுதாரர், பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது கட்டாயம் என்றும் வாதிட்டார்.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பையும், அது தொடர்பான செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் வெளியீட்டையும் மட்டுமே மனுதாரர் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் , இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாணையை எதிர்க்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்