வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை (OCI) நெறிமுறைகள்
April 5 , 2021 1556 days 741 0
வெளிநாடுவாழ் இந்தியர்கள் குடியுரிமைக்கான (Overseas Citizens of India – OCI) உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பட்டியல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த உரிமைகள் 2005, 2007 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் அறிவிக்கப் பட்டுள்ளன.
இந்தியாவிற்குப் பயணம் செய்ய OCI அட்டையைக் கொண்டுள்ள இந்திய வம்சாவளி மக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது புதிய கடவுச்சீட்டு மற்றும் OCI அட்டைகளுடன், பழைய கடவுச்சீட்டினையும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.
தற்போதுள்ள OCI நெறிமுறைகளின்படி (2005 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது) 20 வயது வரையில் (அ) 50 வயதினை எட்டிய பிறகு OCI அட்டையைக் கொண்டுள்ளவர்களுக்குப் புதிய கடவுச்சீட்டு பெறும் போது ஒவ்வொரு முறையும் புதிய OCI அட்டை வழங்கப் படும்.
இப்போது, OCI அட்டைகளை மீண்டும் பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.