வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பண வரவினைப் பெறும் நாடு - 2021
July 26 , 2022 1034 days 504 0
அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியம் பற்றிய முதல் உலக சுகாதார அமைப்பின் உலக அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, உலகில் உள்ள எட்டு பேரில் ஒருவர் சுமார் ஒரு பில்லியன் எண்ணிக்கையினர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பிரிவில் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், வெளிநாடுகளில் இருந்து அதிக பண வரவினைப் பெறும் நாடாக இந்தியா உள்ளது.
2021 ஆம் ஆண்டில் இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வெளிநாடுகளில் இருந்து அதிக பண வரவினைப் பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
2020 ஆம் ஆண்டில் பணம் வரவிற்கான மிகப்பெரிய மூல ஆதார நாடாக அமெரிக்கா இருந்தது.
அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.