வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 16
June 15 , 2025 15 hrs 0 min 7 0
இத்தினமானது, நிலையான சர்வதேச மேம்பாட்டிற்கு, 250 மில்லியன் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் அளித்த நிதிப் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
உலகளாவிய மக்கள்தொகையில் 3.4% பேர் சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் ஆவர் என்ற நிலையில் அவர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 9.4% என்ற அளவிற்குப் பங்களிக்கின்றனர்.
இந்த ஆண்டு, IDFR பிரச்சாரமானது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDG) அடைவதில், பணம் அனுப்புவதன் தாக்கத்தை மிக முழுமையாக அதிகரிக்க என புதுப்பிக்கப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் கோருகிறது.