வெளிநாட்டு உத்தரவாதங்கள் குறித்த புதிய FEMA விதிமுறைகள்
January 18 , 2026 4 days 53 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மை (உத்தரவாதங்கள்) விதிமுறைகளை அறிவித்தது.
இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்களை உள்ளடக்கிய உத்தரவாதங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை இந்த விதிமுறைகள் வழங்குகின்றன.
அவை 1999 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் வழங்கப்படுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த வகை-I (AD-I) வங்கிகள், வெளிநாடு வாழ் நபர்களுடன் தொடர்புடைய உத்தரவாதங்களை வழங்கும் போது, மாற்றியமைக்கும் போது அல்லது செயல்படுத்தும்போது புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
AD-I வங்கிகள் உத்தரவாதம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரு பரிந்துரைக்கப் பட்ட வடிவத்தில் கட்டாயமாக அறிக்கை செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
உத்தரவாதங்கள் தொடர்பான பல முந்தைய அங்கீகரிக்கப்பட்ட (வழிமுறைகள் தொடர்) சுற்றறிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன.
வர்த்தகக் கடனுக்கான உத்தரவாதங்கள் குறித்த காலாண்டு அறிக்கையிடலின் தேவை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டிலிருந்து நிறுத்தப் பட்டுள்ளது.