வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) திருத்த விதிகள், 2023
October 5 , 2023 676 days 400 0
மத்திய உள்துறை அமைச்சகமானது, வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) பல விதிகளைத் திருத்தியமைத்து அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
FCRA உரிமம் கொண்ட பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியளிப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முன்னதாக உறவினர்கள் FCRA சட்டத்தின் கீழ் பெரிய தொகைகளை அனுப்புவதற்கு தளர்வு அளிக்கப் பட்டிருந்ததோடு நிறுவனங்கள் 'பதிவு' அல்லது 'முன் அனுமதி' பிரிவின் கீழ் பெறப்பட்ட நிதிகளுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பது குறித்து அரசுக்குத் தெரிவிப்பதற்கு வழங்கப் பட்ட காலக்கெடுவினை நீட்டித்தது.
புதிய விதிகளானது எந்தவொரு குற்றச்சாட்டினையும் எதிர்கொள்ளாமல் வெளிநாட்டு நிதியளிப்புகளை யார் பெறலாம் என்பதில் குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு இதுவரை தடை செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அத்தகைய நிதியினைப் பெற்றால் இனி அவர்கள் மீது வழக்கு தொடரப் படாது.
ஆனால் அவர்கள் இந்தப் பங்களிப்புகளைப் பற்றி அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்கு 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.