TNPSC Thervupettagam

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம்

November 14 , 2025 14 hrs 0 min 7 0
  • தேசியப் பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட் (NSDL) நிறுவனமானது, வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டாளர்கள் (FPI) மற்றும் வெளிநாட்டுத் துணிகர மூலதன முதலீட்டாளர்கள் (FVCI) ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் மூலதனம் மற்றும் பத்திரச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பதிவு மற்றும் இணக்கத்தை இந்தத் தளம் நெறிப் படுத்துகிறது.
  • இது பல உள்நுழைவுகள் மற்றும் நேரடி நடைமுறைகளைகளுக்கு மாற்றாக, FPI மற்றும் FVCI பதிவுகளை ஒரே இடைமுகமாக ஒருங்கிணைக்கிறது.
  • இந்த அமைப்பில் தானியங்கி நிரந்தர கணக்கு எண் (PAN) கோரிக்கைகள், வழி காட்டப் பட்டச் செயல்பாடுகள், விண்ணப்பக் கண்காணிப்பு மற்றும் முழு தணிக்கை தடங்கள் உள்ளன.
  • 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட NSDL ஆனது, அதன் வைப்புத்தொகை வலையமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மின்னணுமயமாக்கப்பட்ட வடிவத்தில் பத்திரங்களை நிர்வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்