TNPSC Thervupettagam

வெளிநாட்டுப் பண மதிப்பிலான தீர்வு அமைப்பு

October 13 , 2025 14 hrs 0 min 15 0
  • நிதியமைச்சர் குஜராத்தின் GIFT நகரில் ஒரு வெளிநாட்டுப் பண மதிப்பிலான தீர்வு முறையை (FCSS) தொடங்கி வைத்தார்.
  • இந்த அமைப்பு ஆனது, சர்வதேச நிதிச் சேவைகள் மையத்திற்குள் (IFSC) வெளிநாட்டுப் பண மதிப்பிலான பரிவர்த்தனைகளின் நிகழ்நேர அல்லது பகுதியளவு நிகழ்நேரத் தீர்வைச் செயல்படுத்துகிறது.
  • FCSS ஆனது தற்போது தொடர்புடைய வங்கி மூலம் கையாளப்படும் பன்னாட்டுக் கொடுப்பனவுகளில் பல இடைத்தரகர்களைச் சார்ந்திருக்கும் நிலையை நீக்குகிறது.
  • இந்தப் புதிய அமைப்பின் கீழ் அமெரிக்க டாலர் அனுமதியைக் கையாள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்தியப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இணக்கம் மற்றும் செயல்பாட்டு மேற்பார்வையை உறுதி செய்வதற்காக பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்த FCSS ஒழுங்குபடுத்தப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்