பார்னவாபாரா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 50 வெளிமான்களை கோமர்தா வனவிலங்கு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய சத்தீஸ்கர் மாநிலம் திட்டமிட்டுள்ளதுடன் இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இனம் இல்லாமல் போனதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளிமான் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
2017-18 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் பார்னவாபாராவில் வெளிமான் மீட்புத் திட்டத்தைத் தொடங்கி, இரண்டு உயிரியல் பூங்காக்களில் இருந்து 77 வெளிமான்களைக் கொண்டு வந்தது; தற்போது அவற்றின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கரில் அமைந்துள்ள கோமர்தா வனவிலங்கு சரணாலயம் 1975 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு புல்வெளிகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ளன.
வெளிமான் என்பது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I, இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern - LC) மற்றும் நேபாளத்தின் உயிரினங்களுக்கான அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் (CITES) பின்னிணைப்பு III இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.