TNPSC Thervupettagam

வெளிமான் எண்ணிக்கை மீட்புத் திட்டம்

November 14 , 2026 8 hrs 0 min 21 0
  • பார்னவாபாரா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 50 வெளிமான்களை கோமர்தா வனவிலங்கு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய சத்தீஸ்கர் மாநிலம் திட்டமிட்டுள்ளதுடன் இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இனம் இல்லாமல் போனதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • வெளிமான் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • 2017-18 ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் பார்னவாபாராவில் வெளிமான் மீட்புத் திட்டத்தைத் தொடங்கி, இரண்டு உயிரியல் பூங்காக்களில் இருந்து 77 வெளிமான்களைக் கொண்டு வந்தது; தற்போது அவற்றின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
  • சத்தீஸ்கரில் அமைந்துள்ள கோமர்தா வனவிலங்கு சரணாலயம் 1975 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு புல்வெளிகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ளன.
  • வெளிமான் என்பது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை I, இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern - LC) மற்றும் நேபாளத்தின் உயிரினங்களுக்கான அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் (CITES) பின்னிணைப்பு III இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்