TNPSC Thervupettagam

வெளிமான் பாதுகாப்பு – குஜராத்

August 19 , 2026 7 days 136 0
  • ஜாம்நகரில் உள்ள வந்தாராவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள பன்னி புல்வெளிகளில் இருபது வெளிமான்கள் (15 பெண் மான்கள், 5 ஆண் மான்கள்) காடுகளில் விடப்பட்டன.
  • வெளிமான் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) என்பது ஒரு தெற்காசிய புல்வெளி மான் ஆகும், இது IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தியாவில், இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பாதுகாப்பைப் பெறுகிறது.
  • பன்னி புல்வெளிகள் வெளிமான், சின்காரா மற்றும் நீல்காய் போன்ற பூர்வீக தாவர உண்ணிகளை ஆதரிக்கும் ஒரு முக்கிய வறண்ட மற்றும் பகுதி வறண்ட சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
  • குஜராத்தின் பரந்த பாதுகாப்புத் திட்டமானது பூர்வீக தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்காக 500 வெளிமான்கள் மற்றும் 100 சின்காராக்களை இடமாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்