வெள்ளப் பாதிப்பு அபாய மண்டலங்களில் மனிதக் குடியிருப்புகள்
October 16 , 2023 587 days 318 0
உலக வங்கியின் அறிக்கையின்படி, 1985 ஆம் ஆண்டிலிருந்து உலகின் அபாயகரமான வெள்ளப் பகுதிகளில் நிறுவப்படும் மக்கள் குடியேற்றம் 122 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்தக் குடியிருப்பு கட்டமைப்புப் பகுதிகள் 1985 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 85 சதவீதம் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் போன்ற செல்வ வளம் மிக்க நாடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை விட பாதுகாப்பான பகுதிகளில் தான் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன.
சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரண்டு நாடுகளில் குடியிருப்புகளின் பரவல் கடந்த 30 ஆண்டுகளில் மும்மடங்காக அதிகரித்துள்ளன.
பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக கிழக்கு ஆசியாவில், வறண்ட பகுதிகளை விட வழக்கமாக வெள்ளப் பாதிப்பு ஏற்படும் மண்டலங்கள் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ள மண்டலங்களில் மிகவும் அதிகக் குடியிருப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.
கடந்த மாதம் பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியா நாட்டின் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய மண்டலங்களில் அமைந்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 83 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டிலும் அவற்றின் எண்ணிக்கை 89 சதவீதம் அதிகரித்துள்ளது.