ஹால்மார்க்கிங் (தர அடையாளப்படுத்துதல்) தனித்துவமான அடையாள அடிப்படையிலான (HUID) வெள்ளி ஹால்மார்க்கிங் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் தன்னார்வ அடிப்படையில் தொடங்கப்பட்டது.
நுகர்வோர், BIS கேர் செயலியைப் பயன்படுத்தி வெள்ளியின் தூய்மைத் தன்மையை சரிபார்த்து, அந்த வெள்ளிப் பொருட்களின் விவரங்களைக் கண்டறியலாம்.
இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, வெள்ளி ஹால்மார்க்கிங் தரநிலைப் படுத்தலுக்கான IS 2112:2025 என்ற தர நிலைக்கு மாற்றாக IS 2112:2025 என்ற தர அடையாளத்தினை வெளியிட்டுள்ளது.
புதிய ஹால்மார்க் தர நிலையில் "SILVER/வெள்ளி" என்ற சொல்லுடன் கூடிய BIS தரநிலை அடையாளக் குறி, தூய்மை தன்மைக்கானத் தரம் மற்றும் ஒரு HUID குறியீடு ஆகியவை அடங்கும்.
958 மற்றும் 999 ஆகிய இரண்டு புதிய தூய்மை தர நிலைகள் சேர்க்கப்பட்டுள்ளன இதனால் மொத்த வெள்ளி தரங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
தற்போது, 87 மாவட்டங்களில் 230 BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்கள் செயல்படுகின்றன.
2024–25 ஆம் நிதியாண்டில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளி நகைப் பொருட்கள் ஹால்மார்க் செய்யப்பட்டன.