TNPSC Thervupettagam

வெள்ளிமலை நீரேற்று மின் திட்டத் திட்டம்

May 24 , 2026 16 hrs 0 min 31 0
  • கன்னியாகுமரியில் உள்ள 1,100 மெகாவாட் வெள்ளிமலை நீரேற்று நீர்மின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து ஆய்வு வரம்புகளுக்கான (ToR) அனுமதி கிடைத்துள்ளது.
  • இந்த திட்டமானது தமிழ்நாட்டின் வெள்ளிமலையில் நீரேற்று புனல்மின் சேமிப்பு நிலையமாக உருவாக்கப்படும்.
  • பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் கட்டுதல்-சொந்தமாக்குதல்-இயக்குதல்-பரிமாற்றுதல் (BOOT) அடிப்படையில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் முதல் திட்டம் இதுவாகும்.
  • இந்தத் திட்டம் உச்சக்கட்ட மின் நிர்வாகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதற்காக மூடிய-சுழல் நதியற்ற அமைப்பாகத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • இது தலா 275 மெகாவாட் திறன் கொண்ட நான்கு நிலத்தடி உற்பத்தி அலகுகளைக் கொண்டிருக்கும் என்பதோடு இதன் மொத்த நிறுவப்பட்ட திறன் 1,100 மெகாவாட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்