லெபனானின் யோமோர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
வெள்ளை பாஸ்பரஸ் என்பது ஆக்சிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது உடனடியாகத் தீப்பற்றக்கூடிய மற்றும் அடர்த்தியான புகையை வெளியிடக்கூடிய ஒரு வேதிப் பொருள் ஆகும்.
புகைத் திரைகளை உருவாக்கவும், போர்க்களங்களை ஒளிரச் செய்யவும் அல்லது இலக்குகளைக் குறிக்கவும் இது ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு எரிக்கும் கருவியாக பயன்படுத்தப்படும் போது, கடுமையான தீக்காயங்கள், சுவாசப் பாதிப்பு, உறுப்புச் செயலிழப்பு மற்றும் மரணத்தை விளைவிக்கும்.
பொதுமக்கள் வசிக்கும் அல்லது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இத்தகைய எரி படைக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச மனிதாபிமான சட்டம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.