TNPSC Thervupettagam

வெள்ளை வயிற்று நாரையின் வாழிட அச்சுறுத்தல்

July 28 , 2026 3 days 53 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் ஆற்றில் முன்மொழியப்பட்டுள்ள 1,200 மெகாவாட் (MW) நீர்மின் திட்டமானது, மிகத் தீவிரமாக அழிந்து வரும் வெள்ளை வயிற்று நாரையின் (ஆர்டியா இன்சிக்னிஸ்) வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோஹித் ஆற்றுப் படுகையானது இந்தியாவின் வெள்ளை வயிற்று நாரை இனங்களில் சுமார் 70%-ஐ ஆதரிக்கிறது, ஆனால் நாட்டில் தற்போது 6-9 நாரைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
  • இந்த உயிரினமானது 2007 ஆம் ஆண்டு முதல் IUCN செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இது 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த அணையானது ஆற்று நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை மற்றும் ஆற்றங்கரைக் காடுகளை மாற்றி, பறவையின் உணவு மற்றும் கூடு கட்டும் வாழிடங்களைப் பாதிக்கலாம்.
  • லோஹித் ஆற்றுப் படுகையில் வெள்ளை வயிற்று நாரை இருந்தாலும், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் (EIA) அது சேர்க்கப்படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்