வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆனது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவின் அமர்வின் போது தொடங்கப்பட்டது.
கிரிப்ஸ் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இந்த இயக்கம் கோரியது.
இதைத் தொடர்ந்து, குவாலியா எரி மைதானத்தில் M.K. காந்தி அவர்கள் "செய் அல்லது செத்து மடி" என்ற சக்திவாய்ந்த முழக்கத்தை விடுத்தார்.
"சைமனே திரும்பிச் செல்" என்ற முழக்கத்தை உருவாக்கிய யூசுப் மெஹரலி என்பவரே "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்தையும் உருவாக்கினார்.