வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு நினைவு
August 9 , 2017 2917 days 1253 0
1942 ஆம் வருடம், ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாள், மும்பையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வைத்து தான் முதன்முறையாக குயிட் இந்தியா எனப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியானது.
ஆகஸ்டு மாதத்தில் துவக்கிய போராட்டம் என்பதால், இதை ஆகஸ்டு போராட்டம் என்றும், ஆகஸ்ட் கிரந்தி (August Kranti) என்றும் குறிப்பிடுவார்கள்.
இந்த இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியது.
‘கிரிப்ஸ் திட்டம்‘ (Cripps Mission) தோல்வியடைந்த பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இயக்கத்தில் தான் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற "செய் அல்லது செத்து மடி" (“Do or Die” ) என்ற முழக்கம் முழங்கப்பட்டது.