வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகள்/நகரங்கள்
January 15 , 2020 2083 days 780 0
பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகள்/நகரங்களின் அடிப்படையில் சமீபத்திய தர வரிசையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி கேரளாவின் 3 நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தன.
கேரளாவின் மலப்புரம் நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தையும், கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய நகரங்கள் முறையே 4வது மற்றும் 10வது இடங்களையும் பிடித்தன.
வியட்நாமின் கான் தோ பகுதியானது உலக அளவில் இரண்டாவது இடத்திலும், சீனாவின் சுகியன் பகுதியானது மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலானது ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகைப் பிரிவு வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டது.