வேத பள்ளிகள் மற்றும் மதராசக்களை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான மனு
February 17 , 2022 1597 days 656 0
வேத பள்ளிகள், மதராசாக்கள் மற்றும் சமயக் கல்வியை வழங்கி வரும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தனது சட்ட வரம்பிலிருந்து விலக்கிய 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுவினை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விலக்கப்பட்ட நிறுவனங்கள் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மேற்கொள்ளப் பட்ட திருத்தத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்றும் கடந்து 10 ஆண்டுகளில் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
விவகாரம்
ஒரு குழந்தையின் கல்வி உரிமையை இலவசக் கல்விக்கு மட்டும் உட்படுத்தாமல், குழந்தையின் சமூக – பொருளாதார மற்றும் கலாச்சாரப் பின்னணி சார்ந்த பாகுபாடு இல்லாத ஒரு தரமான மற்றும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.