வானியலாளர்கள் முதன்முறையாக பிரம்மாண்டமான வேலா மீப்பேரடைத் தொகுப்பை (வேலா-பான்சி) வரைபடமாக்கியுள்ளனர்.
சுமார் 300 மில்லியன் ஒளியாண்டுகள் பரப்பளவைக் கொண்டுள்ள இது பூமியிலிருந்து சுமார் 800 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அமைப்பு ‘மறைக்கும் மண்டலத்தின்' பின்னால் அமைந்துள்ளதால், இதனை முன்னதாகக் கண்டறிவது கடினமாக இருந்தது.
இது சுமார் 30 குவாட்ரில்லியன் சூரியன்களின் நிறை கொண்ட குறைந்தது 20 விண்மீன் திரள் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்க பெரிய தொலைநோக்கி (SALT) மற்றும் மீர்காட் (MeerKAT) ரேடியோ தொலைநோக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
அறியப்பட்ட மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றான இது, ஷாப்லி மீப்பேரடைத் தொகுப்புடன் ஒப்பிடக் கூடியது என்பதுடன் இது விண்மீன்களின் இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.