தேசியப் புள்ளியியல் அலுவலகமானது, சமீபத்திய வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத காலக் கட்டத்தில் 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பதிவான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது முறையே 2021-22 ஆம் ஆண்டில் 3.2 சதவீதம் மற்றும் 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில், அந்த விகிதங்கள் முறையே கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் 3.3 சதவீதம் மற்றும் 6.7 சதவீதமாக இருந்தது.
சமீபத்தியக் கணக்கெடுப்பானது, 2018-19 ஆம் ஆண்டில் 37.5 சதவீதமாக இருந்த தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் (LFPR) ஆனது கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான அளவில் அதிகரித்து 2021-22 ஆம் ஆண்டில் 55.2 சதவீதமாக உள்ளதனைக் குறிப்பிடுகிறது.
2020-21 ஆம் ஆண்டில் 52.6 சதவீதமாக இருந்த தொழிலாளர் மற்றும் மக்கள் தொகை விகிதம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 52.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் இது 50.9 சதவீதமாக இருந்தது.
தேசியப் புள்ளியியல் அலுவலகமானது, தனித்தனியாக நகர்ப்புற இந்தியாவிற்கான காலாண்டு தொழிலாளர் வளக் கணக்கெடுப்பினை வெளியிட்டது.
டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில், ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
6.6 சதவீதமாக இருந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது சிறு அளவில் அதிகரித்து 9.6 சதவீதமாக உள்ளது.