TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு குறித்த NCAER அறிக்கை 2025

December 19 , 2025 7 days 56 0
  • "இந்தியாவின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்: வேலை வாய்ப்புகளுக்கான பாதைகள்" (India’s Employment Prospects: Pathways to Jobs) என்ற தலைப்பிலான ஓர் அறிக்கை தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி சபையினால் (NCAER) வெளியிடப்பட்டது.
  • சிறு நிறுவனங்களின் திறமையான பணியாளர்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் கணிசமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • கடன் பெறுவதில் சுமார் 1% அதிகரிப்பு கூட எதிர்பார்க்கப்படும் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 45% அதிகரிக்கிறது.
  • டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களை விட 78% அதிகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
  • உழைப்பு மிகுந்த உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை வலுப் படுத்துவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை சுமார் 8 சதவீதத்தில் நிலை நிறுத்த உதவும்.
  • முறையாக திறம் பெற்றப் பணியாளர் வளத்தினை 9-12% புள்ளிகள் அதிகரிப்பது 2030 ஆம் ஆண்டளவில் சுமார் 9.3 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் அல்லது வேலைவாய்ப்பில் 13% அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்