2026 ஆம் ஆண்டிற்கான 7-வது வேளாண்-ஒளிமின்னழுத்தங்கள் உலகளாவிய மாநாட்டை இந்தியா புது தில்லியில் நடைபெறுவதுடன் இம்மாநாடு உலகளாவிய தெற்கில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
வேளாண்-ஒளிமின்னழுத்தங்கள் (AgriPV) என்பது ஒரே நிலத்தில் விவசாயம் மற்றும் சூரிய ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி ஆகியவற்றை இணைப்பதுடன் விவசாயம் மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆகிய இரண்டையும் ஒன்றாக அனுமதிக்கிறது.
இம்மாநாட்டின் கருத்துரு “Powering the Global South” என்பதாகும். இது பயிர் உற்பத்தித் திறன், கொள்கைகள், நிதியுதவி மற்றும் தூய்மையான ஆற்றல் மற்றும் உணவு உற்பத்திக்கான விவசாயிகளை மையமாகக் கொண்ட மாதிரிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (MNRE) இம்மாநாட்டை நடத்துகிறது.
இம்மாநாட்டில் AgriPV கொள்கைக் கையேடு (AgriPV Policy Handbook), இந்திய வேளாண்-ஒளிமின்னழுத்தக் கூட்டணியின் (IAA) முடிவெடுக்கும் கருவி மற்றும் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் (IWMI) சுருக்கங்களின் புத்தகம் ஆகியவை வெளியிடப் பட்டன.