வேளாண் கடன் மற்றும் பயிர்க் காப்பீட்டு முன்னெடுப்புகள்
September 22 , 2023 719 days 370 0
அரசாங்கம் ஆனது மூன்று மாற்றமிக்க முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,
கிசான் ரின் இணைய தளம் (KRP)
வீட்டுக்கு வீடு சென்றடையும் வகையிலான KCC பிரச்சாரம், மற்றும்
வானிலை தகவல் வலையமைப்பு தரவு அமைப்புகள் (WINDS) கையேடு ஆகியவை அடங்கும்.
KRP என்பது கிசான் கடன் அட்டைகளின் (KCC) கீழான கடன் சேவைகளுக்கான அணுகலைப் புரட்சிகரமான முறையில் மாற்றியமைப்பதற்கான கூட்டு முன்னெடுப்பு ஆகும்.
மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் (MISS) மூலம் மானியத்துடன் கூடிய வேளாண் கடன்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.
WINDS முன்னெடுப்பின் மூலம் வேளாண் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும் வகையில், ஒரு குறிப்பிட்டப் பகுதியின் வானிலைத் தரவுகளை வழங்குவதற்கான தானியங்கு வானிலை நிலையங்கள் மற்றும் மழை அளவீடுகளின் வலையமைப்பு ஆனது நிறுவப்பட உள்ளது.