December 21 , 2025
2 days
43
- இந்தியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் 2025–27 ஆம் ஆண்டுகளுக்கான ICAR–INTA பணித் திட்டத்தில் கையெழுத்திட்டன.
- ICAR என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையையும், INTA என்பது அர்ஜென்டினாவின் தேசிய வேளாண் தொழில்நுட்ப நிறுவனத்தையும் குறிக்கிறது
- இந்தத் திட்டம் நிலையான வேளாண்மை, உயிரி தொழில்நுட்பம், டிஜிட்டல் வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இந்தக் கூட்டுறவில் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மரபணு வளப் பரிமாற்றம், நிபுணர் தொடர்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
- பரிமாற்றத்திற்கான முக்கியப் பயிர்களில் சோயா அவரை, சூரியகாந்தி, மக்காச்சோளம், புளுபெர்ரி, சிட்ரஸ், கொய்யா மற்றும் காட்டுப் பப்பாளி இனங்கள் அடங்கும்.
- வருடாந்திரக் கண்காணிப்பு மற்றும் மறு ஆய்வுக் கூட்டங்கள் முன்னேற்றத்தைக் கண்காணித்து அதைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யும்.

Post Views:
43