வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் - பஞ்சாப் சட்டசபை
November 16 , 2021 1469 days 660 0
பஞ்சாப் சட்டசபையானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று, மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு உள்ளது.
அந்தத் திடமானச் சட்டங்கள் சட்டத்திற்குப் புறம்பாக மாநில அரசின் களத்தில் நுழைந்து விட்டதாகக் கூறி இந்தத் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அம்மாநிலச் சட்டசபை நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானம் இதுவாகும்.
முதல் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் புதிய தீர்மானத்தை மாநில வேளாண் அமைச்சர் ரன்தீப் சிங் நாபா தாக்கல் செய்தார்.