வேளாண் துறைக்கான இந்தியாவின் முதல் உரையாடு மென்பொருள்
February 25 , 2023 883 days 435 0
அமா க்ருஷ் AI எனப்படும் வேளாண் துறைக்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளானது ‘க்ருஷி ஒடிசா 2023’ நிகழ்வின் நிறைவுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த உரையாடு மென்பொருளானது சிறந்த வேளாண் நடைமுறைகள், அரசுத் திட்டங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடன் சேவைகள் குறித்தத் தகவல்களை விவசாயிகள் பெற உதவும்.
இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT அமைப்பு மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் உருவாக்கிய மொழி சார் உரையாடு மென்பொருள் தளமான பாஷினி ஆகியவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டு உள்ளது.