இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் வேளாண்மை 15 முதல் 20 சதவீதம் வரை பங்களிக்கிறது.
இது இந்தியாவின் சுமார் 60 சதவீதப் பணியாளர்களை ஆதரிக்கிறது மற்றும் மில்லியன் கணக்கான வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துகிறது.
புது டெல்லியில் நடைபெற்ற 'Dialogue NEXT' நிகழ்வின் போது இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.
இந்த நிகழ்வை இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை (ICAR) ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வானது சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையம் (CIMMYT) மற்றும் தெற்காசியாவிற்கான போர்லாக் நிறுவனம் (BISA) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
நடைமுறை சார்ந்த வேளாண் தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக "Take it to the Farmer" என்ற கருத்துருவின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
'Dialogue NEXT' நிகழ்வு உலகளாவிய வேளாண் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை ஒன்றிணைத்தது.