வேளாண் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்வதற்கான இலக்கு
February 14 , 2022 1304 days 496 0
2024ஆம் ஆண்டுக்குள் வேளாண் துறையில் டீசலுக்குப் பதிலாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மீதான பயன்பாட்டினை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களின் பயன்பாட்டுப் பங்கை அதிகரிப்பதற்கும் 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரப் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட நாடாக மாறுவதாகவும் அரசு மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
குசம் திட்டத்தின் மூலம், வேளாண்மையை சூரிய ஒளி சக்திமயமாக்குவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
சூரிய ஒளியில் இயங்கும் நீர்ப்பாசன அமைப்புகளை நிறுவ இத்திட்டம் உதவும்.