மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் இணையத்தின் மூலம்,
கிருஷி மேக் உடன் KVC ALUNET (Krishi Vishwavidyalaya Chhatr Alumni Network)
டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சியின் அடிப்படையில் உயர் வேளாண் கல்வி நிறுவனங்களுக்கான இணையவழி அங்கீகார முறை
ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பு – மேகக் கணினி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் என்று அழைக்கப்படும் கிருஷி மேக் ஆனது அரசாங்கத்தின் முதன்மை ஆராய்ச்சி அமைப்பான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
74 வேளாண் பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களிடையே தகவல் அல்லது சமூக வலைப் பின்னலைப் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் ஊடகமாக “கே.வி.சி முன்னாள் மாணவர் வலையமைப்பு” (KVC ALUNET) செயல்படுகிறது.