சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி வேளாண் பல்கலைக் கழகத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சகத்தினால் ஒரு வேளாண் வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது “ராப்தார்” (RAFTAAR) என்ற தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயத்தின் பல்வேறு துறைகளில் உள்ள தொடக்க நிலை நிறுவனங்களுக்காக இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பயிற்சி வழங்கப்படவிருக்கின்றது.