TNPSC Thervupettagam

வேளாண் விளைபொருள் உற்பத்தி குறித்த வருடாந்திர அறிக்கை

July 1 , 2025 9 hrs 0 min 28 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) ஆனது, “Statistical Report on Value of Output from Agriculture and Allied Sectors – வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கையை (2011-12 முதல் 2023-24 வரை)” வெளியிட்டுள்ளது.
  • நடப்பு விலையில் வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளின் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 225% அதிகரித்து 4,878 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
  • இது 2011-12 ஆம் ஆண்டில் 1,502 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
  • நிலையான விலையில் உற்பத்தியின் மொத்த மதிப்பு (GVO) 54.6% அதிகரித்து, 2011-12 ஆம் ஆண்டில் 1,908 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டில் 2,949 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 1,595 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பயிர்ச் சாகுபடித் துறையின் மொத்த GVO ஆனது, மொத்த வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்பு உடைய துறைகளின் GVO உற்பத்தியில் 54.1% பங்களித்தது.
  • தானியங்கள் மற்றும் பழங்கள் & காய்கறிகள் உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் பயிர் GVO உற்பத்தியில் 52.5% பங்களித்தன.
  • 2023-24 ஆம் ஆண்டில் அனைத்துத் தானியங்களின் GVO உற்பத்தியில் நெல் மற்றும் கோதுமையின் பங்கு சுமார் 85% ஆகும்.
  • வாழைப்பழத்தின் GVO ஆனது (சுமார் 47.0 ஆயிரம் கோடி) 2023-24 ஆம் ஆண்டில் மாம்பழத்தின் (46.1 ஆயிரம் கோடி) GVO பங்கினை விட அதிகமாக இருந்தது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 21.3 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 37.2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து, காய்கறி உற்பத்தியில் அதிகளவிலான பங்களிப்பாளராகத் தொடர்ந்து திகழ்கிறது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 17.4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மலர்கள் வளர்ப்பு உற்பத்தி ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 28.1 ஆயிரம் கோடி ரூபாயாக சுமார் இரட்டிப்பாகி உள்ளது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 488 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கால்நடைப் பொருட்களின் GVO ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 919 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
  • 2011-12 ஆம் ஆண்டில் சுமார் 67.2 சதவீதமாக இருந்த கால்நடை வளர்ப்புத் துறையில் பால் உற்பத்தியின் GVO பங்கு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 65.9% ஆக சற்றுக் குறைந்தது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாக இருந்த கால்நடைகள் துறையில் இறைச்சியின் GVO பங்கு 2023-24 ஆம் ஆண்டில் 24.1% ஆக உயர்ந்தது.
  • வனவியல் மற்றும் மரம் வெட்டுதல் GVO ஆனது 2011-12 ஆம் ஆண்டில் சுமார் 149 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 227 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.
  • வனவியல் உற்பத்தியில், 2011-12 ஆம் ஆண்டில் 49.9 சதவீதமாக இருந்த தொழில்துறை பயன்பாடு சார் மர வளர்ப்பு உற்பத்தியின் பங்கு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 70.2% ஆக உயர்ந்தது.
  • மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு துறையின் பங்களிப்பு ஆனது, 2011-12 ஆம் ஆண்டில் 4.2 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 7.0% ஆக உயர்ந்தது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 57.7% ஆக இருந்த உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையின் பங்கு ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 50.2% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் கடல் சார் மீன் வளர்ப்புத் துறையின் பங்கு 42.3 சதவீதத்திலிருந்து 49.8% ஆக உயர்ந்துள்ளது.
  • பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர் வளர்ப்பில் மாநில வாரியானப் பங்குகள் 2011-12 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க அளவில் மாறின.
  • உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகியவை 2023-24 ஆம் ஆண்டில் தானிய GVO பங்கில் சுமார் 53% பங்களித்தன.
  • உத்தரப் பிரதேசம் அதன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் ஆனது சுவையூட்டுப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் GVO பங்கில் 19.2% பங்குடன் முன்னிலை பெற்றது அதைத் தொடர்ந்து கர்நாடகா (16.6%) மற்றும் குஜராத் (15.5%) உள்ளன.
  • மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை 2011-12 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை மீன்வளத் துறையின் GVO பங்கில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்