TNPSC Thervupettagam
December 24 , 2022 866 days 1841 0
  • சமீபத்தில் வைனு பாப்பு தொலைநோக்கியானது தனது 50 ஆண்டு கால பணிக் கால நிறைவினைக் கொண்டாடியது.
  • இந்தத் தொலைநோக்கியானது, தமிழ்நாட்டின் காவலூரில் பேராசிரியர் வைனு பப்பு அவர்களால் 1972 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • காவலூர் என்பது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள ஒரு கிராமமாகும்.
  • காவலூர் பகுதியில் வானங்களின் காட்சிகள் சிறப்பாக உள்ளதோடு, அது தெற்குப் பகுதியில் அமைந்துள்ளதால் வடக்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதி வானத்தின் பெரும் பகுதியை இங்கிருந்து காண முடியும்.
  • யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையங்கள் இருப்பது, யுரேனஸின் புதிய துணைக் கோள், வியாழனின் துணைக் கோளான கேனிமீட்டைச் சுற்றி வளிமண்டலம் இருப்பது போன்ற பல முக்கியக் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதன் மூலம் வானியலில் இது குறிப்பிடத் தக்க பங்களிப்பினைக் கொண்டுள்ளது.
  • இதில் பல ‘Be Stars’, இராட்சத நட்சத்திரங்களில் லித்தியம் குறைதல், அண்ட அணுக் கருக்களில் (Blazars) ஏற்படும் ஒளியியல் மாறுபாடு மற்றும் பிரபலமாக கூறப்படும் SN 1987A எனப்படும் சூப்பர்நோவாவின் இயக்கவியல் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு ஆகியவை இதன் மூலம் மேற்கொள்ளப் பட்டது.
  • 1976 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட கேஸ்கிரேன் ஒளிமானி மற்றும் எச்செல் நிறமாலை மானி முதல், 1978 ஆம் ஆண்டில் புதிய ஒளியடைப்பு நிறமாலை மானி, 1988 ஆம் ஆண்டில் ஒளியியல் சுழற்சி கருவி 2016 ஆம் ஆண்டில் மாற்றப் படுதல் மற்றும் 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சமீபத்திய NIR ஒளிமானி ஆகியவை உட்பட இந்தக் கண்காணிப்பகம் அதன் வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்