இந்தியப் பிரதமர் “வைஷ்விக் பாரதிய வைக்யானிக் மாநாடு 2020” என்று பெயர் கொண்ட வெளிநாடு வாழ் மற்றும் வெளிநாட்டில் குடியிருக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் காணொலி முறையிலான மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இது உலகம் முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி & வளர்ச்சி அமைப்புகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்திய வல்லுநர்களை உலகளாவிய வளர்ச்சிக்காக வேண்டி இந்தியாவில் உள்ளகல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் தளத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.