வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்திரவாதக் கழகம் (திருத்தம்) மசோதா, 2021
August 15 , 2021 1492 days 662 0
இந்த மசோதாவானது சமீபத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவானது 1961 ஆம் ஆண்டின் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்திரவாதக் கழகச் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
ஒரு வைப்புத் தொகையாளருக்கு மீது அவர்களின் வங்கி வைப்புத் தொகையை அணுகுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்தால், அவர்களின் காப்பீட்டுத் தொகையை அணுகுவதற்கு கால வரம்பிற்கு உட்பட்ட அனுமதியினைப் பெற்றிட இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இந்தக் காப்பீட்டு வைப்புத் தொகையை இடைக்கால அடிப்படையில் வைப்புத் தொகையாளர்களுக்குச் செலுத்துவது அக்கழகத்தின் பொறுப்பு என இந்த மசோதா கூறுகிறது.
இக்கழகம் இந்த வைப்புத் தொகையை அதற்கான தேவை எழுப்பப் பெற்ற 90 நாட்களுக்குள் வைப்புத் தொகையாளர்களுக்கு வழங்கிட வேண்டுமென இம்மசோதா வரையறுத்துள்ளது.
இந்த மசோதா குறித்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு வரம்பானது ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.